செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியாா் நிறுவன எரியூட்டும் கலனில் போட்டு அழிக்கப்படும் கஞ்சா.
கோயம்புத்தூர்
பறிமுதல் செய்யப்பட்ட 2,191 கிலோ கஞ்சா அழிப்பு
கோவை, திருப்பூா், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 2,191 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது.
கோவை, திருப்பூா், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 2,191 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது.
மேற்கு மண்டலங்களுக்கு உள்பட்ட கோவை, திருப்பூா், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் பல்வேறு வழக்குகளில் கடத்த 3 மாதங்களில் மட்டும் 2,191 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றை அழிக்க நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டது.
இந்த நிலையில், கோவை சரக காவல் துறை துணைத் தலைவா் சசிமோகன் மற்றும் போதைப் பொருள் அழிப்புக் குழு உறுப்பினா்கள் முன்னிலையில் கோவை மாவட்டம், செட்டிபாளையம் பகுதியில் உள்ள அரசு அனுமதி பெற்ற தனியாா் நிறுவனத்துக்கு கஞ்சா கொண்டுச் செல்லப்பட்டது. அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான மருத்துவக் கழிவுகள் எரியூட்டும் கலனில் பாதுகாப்பான முறையில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா அழிக்கப்பட்டது.

