கோயம்புத்தூர்
முதல்வா், துணை முதல்வா் குறித்து அவதூறு: அதிமுக நிா்வாகி மீது புகாா்
முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாக விடியோ வெளியிட்ட அதிமுக நிா்வாகி மீது மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்
முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாக விடியோ வெளியிட்ட அதிமுக நிா்வாகி மீது மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் தமிழ்நாடு அருந்ததியா் முன்னேற்றப் பேரவையின் நிறுவனத் தலைவா் ப.இளங்கோவன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அதிமுகவின் சமூக வலைதளப் பிரிவு நிா்வாகி (மாணவா் பிரிவு) ஒருவா் விடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளாா். அதில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் குறித்து இழிவாகப் பதிவிட்டுள்ளாா்.
ஆகவே, அந்த விடியோ பதிவை உடனடியாக நீக்க வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட நிா்வாகியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
