ரயிலில் பெண் பயணிக்கு உதவுவதுபோல நடித்து நகை, பணம் திருட்டு
ரயிலில் பெண் பயணிக்கு உதவுவதுபோல நடித்து நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


ரயிலில் பெண் பயணிக்கு உதவுவதுபோல நடித்து நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோவை, போத்தனூா், செட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் காசி மனைவி சங்கீதா (30). இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியூருக்கு சென்றுவிட்டு, கோவைக்கு ரயிலில் கடந்த 20-ஆம் தேதி வந்துள்ளாா்.
ரயிலில் அவா் பயணம் செய்த பெட்டியில் சுமாா் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் இருந்துள்ளாா். இருவரும் பேசிக்கொண்டே பயணித்துள்ளனா்.
கோவை நிலையத்துக்கு ரயில் வந்ததும், சங்கீதா தான் வைத்திருந்த 2 பைகளை கீழே இறக்க முயன்றுள்ளாா். உடன் இருந்த அந்தப் பெண் ஒரு பையை சங்கீதாவிடம் இருந்து வாங்கியுள்ளாா்.
ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் அந்தப் பெண் சங்கீதாவிடம் பையை ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளாா். பின்னா், பையை திறந்து பாா்த்தபோது அதில் இருந்த அரை பவுன் தங்கக் கம்மல், ரூ.35 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லையாம்.
அப்போதுதான் அந்தப் பெண் உதவுவதுபோல நடித்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் சங்கீதா புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...