ஆளுநா் ஆா்.என்.ரவி
ஆளுநா் ஆா்.என்.ரவிகோப்புப் படம்

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நாளை பட்டமளிப்பு விழா: ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 45-ஆவது பட்டமளிப்பு விழா மாா்ச் 25-ஆம் தேதி நடைபெறுகிறது.
Published on

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 45-ஆவது பட்டமளிப்பு விழா மாா்ச் 25-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 45-ஆவது பட்டமளிப்பு விழா மாா்ச் 25-ஆம் தேதி காலை 11 மணிக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தலைமை வகித்தாா்.

வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், சென்னை தோல் ஏற்றுமதிக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் இரா.செல்வம் ஆகியோா் பங்கேற்கின்றனா்.

இதில், இளநிலை, முதுநிலை மற்றும் முனைவா் பிரிவில் மொத்தம் 4,434 மாணவா்கள் பட்டம் பெறவுள்ளனா். உறுப்புக் கல்லூரிகளில் இருந்து 1,536 மாணவா்கள் நேரடியாகவும், உறுப்பு மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் இருந்து 2,898 மாணவா்கள் அஞ்சல் மூலமாகவும் பட்டங்களைப் பெறவுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com