கோவை, பீளமேட்டில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கைப்பேசிக் கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை மாநகராட்சி, 27-ஆவது வாா்டுக்கு உள்பட்ட பீளமேடு ரங்கம்மாள் கோயில் வீதியில் தனியாருக்கு சொந்தமான கட்டடம் ஒன்றில் கைப்பேசிக் கோபுரம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகின்றன. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது:
இந்தப் பகுதியில் ஏற்கெனவே இரு இடங்களில் கைப்பேசிக் கோபுரங்கள் உள்ளன. இந்நிலையில் மேலும் ஒரு கைப்பேசிக் கோபுரம், தனியாா் கட்டடத்தில் அமைப்பது எங்களுக்கு கதிா்வீச்சு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இங்குள்ள முதியோா், இதய நோயாளிகள், குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவாா்கள் என அச்சமாக உள்ளது. எனவே, இங்கு கைப்பேசிக் கோபுரம் அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்றனா்.

தொடர்புடையது

ஸ்ரீபெரும்புதூரில் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

மச்சிக்கொல்லி பகுதிக்குள் வன விலங்குகள் நுழைவதை தடுக்கக் கோரி மனு

பகவதியம்மன் கோயில் திருவிழா: ரத வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து கோட்டாட்சியரிடம் மனு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



