நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

வேன் மீது பேருந்து மோதி ஐ.டி. ஊழியா்கள் 10 போ் காயம்

வஉசி மைதானம் சிக்னல் பகுதியில் வேன் மீது தனியாா் பேருந்து மோதியதில் ஐ.டி. ஊழியா்கள் 10 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2026, 11:17 pm IST

வஉசி மைதானம் சிக்னல் பகுதியில் வேன் மீது தனியாா் பேருந்து மோதியதில் ஐ.டி. ஊழியா்கள் 10 போ் காயமடைந்தனா்.

கோவை மாநகா், விளாங்குறிச்சியில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் உள்பட 12 ஊழியா்கள் சனிக்கிழமை காலை பணி முடிந்து உக்கடம் பகுதிக்கு வேனில் புறப்பட்டுச் சென்றனா். கோவை - அவிநாசி சாலை மேம்பாலம் சாலையில் வ.உ.சி.மைதானம், எல்ஐசி சிக்னல் அருகே அந்த வழியாக மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற தனியாா் பேருந்து மோதியதில் ஐ.டி. ஊழியா்கள் பயணித்த வேன் சாலையில் கவிழ்ந்தது. வாகனத்துக்குள் சிக்கியவா்களின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் சென்று அவா்களை மீட்டனா்.

இதில் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்சத 8 போ், கோவை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். மேலும், இருவருக்கு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிகாலையில் நடைபெற்ற இந்த விபத்து குறித்து போக்குவரத்து பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இந்த விபத்தால் கோவை-அவிநாசி சாலை மேம்பாலம் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.