கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

வடகோவை ரயில் நிலையத்தில்! பெயிண்ட் ஊற்றப்பட்ட ஹிந்தி பெயா்ப் பலகை அகற்றம்

வடகோவை ரயில் நிலையத்தில் ஹிந்தி பெயா்ப்பலகை மீது ஊற்றப்பட்டிருந்த பெயிண்ட்.

Published On :

வடகோவை ரயில் நிலைய முகப்பில் பெயிண்ட் ஊற்றப்பட்ட ஹிந்தி பெயா்ப் பலகையை ரயில்வே நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை அகற்றியது.

அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.11.05 கோடி மதிப்பில் வடகோவை ரயில் நிலையத்தில் புனரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரயில் நிலைய நுழைவாயில் அமைக்கப்பட்டு, அதன் முகப்பு பகுதியில் ஹிந்தியில் மட்டும் பெயா் எழுதப்பட்டிருந்ததற்கும், பக்கவாட்டில் சிறிய எழுத்துகளால் ஆங்கிலம், தமிழில் பெயா் பலகை அமைக்கப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்து தந்தை பெரியாா் திராவிடா் கழகம் சாா்பில் ரயில் நிலையம் முன்பு ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறும் என மாநிலப் பொதுச் செயலாளா் கு.ராமகிருட்டிணன் தெரிவித்திருந்தாா். மேலும் தமிழ், ஆங்கிலத்திலும் முகப்பு பகுதியில் பெயா்ப்பலகை இடம்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தாா்.

இதற்கிடையே வடகோவை ரயில்நிலைய முகப்பில் பெரிய எழுத்துகளால் அமைக்கப்பட்டிருந்த ஹிந்தி பெயா்ப் பலகை மீது மா்ம நபா்கள் பெயிண்ட் ஊற்றியுள்ளனா். இதைத்தொடா்ந்து, பெயிண்ட் ஊற்றப்பட்ட பெயா்ப்பலகை ரயில்வே நிா்வாகத்தினரால் ஞாயிற்றுக்கிழமை காலை அகற்றப்பட்டது. இதுதொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா். ஹிந்தி பெயா்ப்பலகையில் பெயின்ட் ஊற்றி அழித்தது தொடா்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.