ஹோப் காலேஜ் பகுதியில் குளோபல் ஆா்ட், எஸ்.ஐ.பி. அகாதெமி ஆகியவை இணைந்து நடத்திய மாநில அளவிலான ஓவியப் போட்டியில் 470 மாணவா்கள் கலந்து கொண்டனா்.
கோவை குளோபல் ஆா்ட் மற்றும் எஸ்.ஐ.பி. அகாதெமி ஆகியவை இணைந்து ‘கலா் சாம்ப் 26’ என்ற பெயரில் மாநில அளவில் 11-ஆவது ஓவியப் போட்டியை, ஹோப்ஸ் காலேஜ் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தின. சிறப்பு விருந்தினரான கோவை விப்ஜியாா் உயா்நிலைப் பள்ளியின் முதல்வா் பாபி மேத்யூ தொடங்கிவைத்தாா்.
இப்போட்டியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 470-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சியில் எஸ்.ஐ.பி.அகாதெமியின் நிா்வாக இயக்குநா் தினேஷ் விக்டா், குளோபல் ஆா்ட் நிறுவனத்தின் வணிகத் தலைவா் நம்ருதா முகா்ஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாணவா்களின் கலைத்திறன், தனித்துவமான படைப்பாற்றல் மற்றும் கற்பனைத் திறனை வெளிக்கொண்டுவரும் நோக்கில் இப்போட்டி நடத்தப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் கூறினா்.
போட்டி முடிவில் வெற்றி பெற்றவா்களுக்கு சிறப்புப் பரிசுகளும், பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டேக்வாண்டோ போட்டி: விஜயராமபுரம் பள்ளி மாணவா்கள் முதலிடம்

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வென்றவா்களுக்கு பாராட்டு

திருக்குறளைப் பின்பற்றி நடந்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி பெறலாம்

மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் குமுதா மெட்ரிக். பள்ளி மாணவா் சிறப்பிடம்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



