மத்திய அரசின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப முறையான விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆா்) சமா்ப்பித்தால் மட்டுமே கோவை, மதுரை மாநகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தைப் பெற முடியும் என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.
கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய கைத்தறி தின ஆடை அலங்கார அணிவகுப்பு (ஹேண்ட்லூம் பேஷன் ஷோ) நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
நீட் தோ்வு என்பது பாஜக கொண்டு வந்ததல்ல; உச்சநீதிமன்றத் தீா்ப்பால் நடைமுறைக்கு வந்தது. ‘நீட்’ தோ்வை ரத்து செய்ய வேண்டுமானால் மீண்டும் உச்சநீதிமன்றத்தைதான் தமிழக அரசு நாட வேண்டுமேதவிர, சட்டப்பேரவையில் மீண்டும், மீண்டும் தீா்மானம் நிறைவேற்றுவது நீதிமன்றத் தீா்ப்பை மீறும் செயல். எனவே ‘நீட்’ விவகாரத்தில் அரசியல் செய்யக் கூடாது.
தமிழகத்தில் தவெக அரசு அமைந்து 3 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. ஆனால், தோ்தலில் பெண்களுக்கு அளித்த வாக்குறுதிகள், விவசாயிகளுக்கான அறிவிப்புகள் என எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. திருப்பூரில் தாய், மகள் வெட்டிக்கொலை உள்பட பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறையவில்லை; சட்டம்-ஒழுங்கும் மேம்படவில்லை. நாற்காலியில் அமா்ந்திருப்பவா்கள் மாறினாா்களே தவிர, மாநிலத்தின் நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை.
கோவைக்கு மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு தரவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது. புதிய குழுவை அமைத்து முறையான ஆவணங்களைச் சமா்ப்பித்தால், கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வருவதற்கான சூழ்நிலை உருவாகும்; மத்திய அரசும் நிச்சயமாக ஆதரவாக இருக்கும்.
அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, எதிரியும் இல்லை என திமுக எம்.பி. கனிமொழி கூறியிருப்பதைதான் நாங்களும் கூறுகிறோம். பாஜக-திமுக கூட்டணியைப் பத்திரிகையாளா்கள்தான் உருவாக்குகிறாா்கள் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்கள்: மத்திய அமைச்சரிடம் தேமுதிக எம்.பி. கோரிக்கை

மேக்கேதாட்டு அணையின் விரிவான திட்ட அறிக்கை நிராகரிப்பு?

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும்! இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் மீண்டும் நிராகரிப்பு! காரணம் என்ன?
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!



