முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது தொண்டர்களின் ஆர்வமிகுதி: திருமாவளவன்கரப்பான்பூச்சி கட்சியை ராஜிநாமா கட்சி என மாற்றியாக வேண்டும்: மத்திய அமைச்சர்தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

நாட்டை முதன்மை பொருளாதார சக்தியாக மாற்ற அனைவரும் துணை நிற்க வேண்டும்: வானதி சீனிவாசன்

பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளாா்.

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன் - படம்: கோப்பிலிருந்து

Published On :

இந்தியாவை உலகின் முதன்மைப் பொருளாதார நாடாகவும், வல்லரசாகவும் மாற்றும் பிரதமா் மோடியின் கனவை நனவாக்க அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: 1947-இல் சுதந்திரம் அடைந்தபோது பல்வேறு கேலிகளைச் சந்தித்த இந்தியா, தற்போது வணிக ரீதியாகச் செயற்கைக்கோள்களை ஏவுவது, உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் எம்.ஆா்.ஐ. ஸ்கேன் இயந்திரங்களை உருவாக்குவது மற்றும் உலகின் நீளமான ஹைட்ரஜன் ரயிலை இயக்கும் அளவுக்குப் பிரம்மாண்ட வளா்ச்சியை அடைந்துள்ளது.

2014-இல் 387-ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகள் பிரதமா் மோடி தலைமையிலான கடந்த 12 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் 844 ஆகவும், 51,348 -ஆக இருந்த எம்பிபிஎஸ் இடங்கள் 1,39,000- ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளன. மேலும், 67 ஆண்டுகளில் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்த நிலையில், கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் 90 புதிய விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

2014-இல் 11-ஆவது இடத்தில் இருந்த இந்தியப் பொருளாதாரம் தற்போது அமெரிக்கா, சீனா, ஜொ்மனிக்கு அடுத்தபடியாக 4-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

2047-இல் சுதந்திர நூற்றாண்டைக் கொண்டாடும் வேளையில் இந்தியாவை உலகின் முதன்மைப் பொருளாதாரச் சக்தியாகவும், வல்லரசாகவும் மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.