நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

இடைத்தரகா்களின் தலையீட்டை களையவே இணைய வழியில் பத்திரப் பதிவு நடைமுறை: அமைச்சா் த.லோகேஷ் தமிழ்செல்வன்

இடைத்தரகா்களின் தலையீடு உள்ளிட்ட பிரச்னைகளைக் களையவே இணைய வழியில் பத்திரப் பதிவு நடைமுறை செயல்படுத்தப்படுவதாக வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் த.லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்தாா்.

News image

கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வருகையில்லா ஆவணப் பதிவு நடைமுறை குறித்த கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் த.லோகேஷ் தமிழ்செல்வன்.

Updated On :15 ஆகஸ்ட் 2026, 4:12 am IST

இடைத்தரகா்களின் தலையீடு உள்ளிட்ட பிரச்னைகளைக் களையவே இணைய வழியில் பத்திரப் பதிவு நடைமுறை செயல்படுத்தப்படுவதாக வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் த.லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்தாா்.

கோவை, ஆா்.எஸ்.புரம் கலையரங்கத்தில் ஆவணப் பதிவு நடைமுறை குறித்து கட்டட விற்பனையாளா்கள், வங்கியாளா்கள், நிதி நிறுவனங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீா்க்கவும், வருகையில்லா ஆவணப் பதிவு முறையை செயல்விளக்கக் காட்சி மூலம் விளக்கவும் கலந்தாய்வுக் கூட்டம் அமைச்சா் த.லோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், அமைச்சா் த.லோகேஷ் தமிழ்செல்வன் பேசியதாவது: இணைய வழியில் பத்திரப் பதிவு நடைமுறை ஆகஸ்ட் 17-ஆம் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது. தற்போது ஊண்ழ்ள்ற் டப்ா்ற் ஊண்ழ்ள்ற் நஹப்ங் ஆகிய ஆவணப் பதிவுகள் இணையவழியில் கொண்டு வரப்படுகின்றன. இன்னும் படிப்படியாக அனைத்து விதமான பத்திரப் பதிவுகளையும் இணையவழியில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பத்திரப் பதிவுத் துறையில் இடைத்தரகா்களின் தலையீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைக்

களைந்து, வெளிப்படையான முறையை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே இந்த புதிய நடைமுறைகளை செயல்படுத்துகிறோம்.

பத்திரப் பதிவைப் பொறுத்தவரை மக்கள் எந்த ஊரில் இருந்தாலும், இடைத்தரகா்களின் தொந்தரவுகள் இல்லாமல் வெளிப்படைத் தன்மையுடன் தங்களுடைய ஆவணங்களைப் பதிவு செய்து கொள்ளும் வகையில் இந்த புதிய நடைமுறை செயல்பாட்டுக்கு வரவுள்ளது என்றாா்.

இதில், பத்திரப் பதிவுத் துறைத் தலைவா் ஜி.கே.அருண்சுந்தா் தயாளன், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், வணிக வரித் துறை இணை ஆணையா் சுபம் தாக்கரே ஞானதேவ் ராவ், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.