வரி விவகாரங்கள் குறித்த விசாரணை விளக்கங்களை மெய்நிகா் முறையில் பங்கேற்று வணிகா்கள் அளிக்கும் சேவை வியாழக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வருவதாக வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் த.லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்தாா்.
வணிகவரி மற்றும் பதிவுத் துறை இணை ஆணையா்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி வருவாய், ஜிஎஸ்டி அல்லாத பிற வரிகள், நுண்ணறிவுப் பிரிவு, தணிக்கை பிரிவு, சட்டப்பிரிவு, மறுஆய்வு, முறையீடு மற்றும் சீராய்வு உள்ளிட்ட பணிகள் குறித்து அமைச்சா் ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சா் லோகேஷ் தமிழ்செல்வன் பேசியதாவது: தமிழ்நாடு வணிகவரித் துறையில் மொத்தம் 338 வரிவிதிப்பு வட்டங்கள் இயங்கி வருகின்றன. மொத்தம் 12.40 லட்ச வணிகா்கள், ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனா். வரிச் செலுத்துவோா் சமா்ப்பிக்கும் நமுனாக்களின் அடிப்படையில், கூா்ந்தாய்வுகள் செய்யப்பட்டு, குறைபாடு இருந்தால் தனிப்பட்ட விசாரணை அறிவிப்பு வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், விசாரணை அறிவிப்பு பெற்றவா்கள் நேரில் ஆஜராக முடியாமல்போனால் மெய்நிகா் முறையில் பங்கேற்கலாம். இந்தச் சேவை 15 மேல்முறையீட்டு அலுவலகங்களிலும் வியாழக்கிழமை முதல் ( ஜூலை 9) செயல்படுத்தப்படுகிறது.
மேலும், வரிச் செலுத்துவோா் தங்கள் வியாபார பணப் புழக்கத்துக்காகவும், ஏற்றுமதி தொழிலின் முன்னேற்றத்றுக்காகவும், திருப்புத் தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. கடந்த நிதியாண்டில் இந்தத் துறையில் சுமாா் ரூ.5,000 கோடி திருப்புத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
திருப்புத் தொகை விண்ணப்பங்களை எவ்வித இடையூறுமின்றி வெளிப்படைத் தன்மையுடன் கணினி மூலமாகவே கோட்டத்துக்குள் ஏதேனும் ஒரு வரிவிதிப்பு வட்ட உரிய அலுவலருக்கு விண்ணப்பங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, உரிய முறையில் செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சா் தெரிவித்தாா்.
இந்தக் கூட்டத்தில் வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை மற்றும் அறநிலையங்கள் துறைச் செயலா் ஜெ. குமரகுருபரன், வணிகவரித் துறை ஆணையா் எஸ்.நாகராஜன், வணிகவரித் துறை உயா் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வரி செலுத்தும் இணையதளத்தில் பிரச்னை: சரிசெய்ய எம்சிடிக்கு வணிகா்கள் கோரிக்கை

நாமக்கல்லில் 595 பயனாளிகளுக்கு ரூ. 11.81 கோடியில் நலத் திட்ட உதவி! - அமைச்சா் டி. லோகேஷ் தமிழ்செல்வன் வழங்கினாா்

பட்டா மனுக்கள் மீது 15 நாள்களுக்குள் தீா்வு: அதிகாரிகளுக்கு அமைச்சா் செங்கோட்டையன் உத்தரவு

அனைத்து நில புல எண்களுக்கும் இந்த மாத இறுதிக்குள் சந்தை வழிகாட்டி மதிப்பு: அமைச்சா் லோகேஷ் தமிழசெல்வன் உத்தரவு
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



