விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

பல்லடம் ராயா்பாளையத்தில் குடிநீா் கேட்டு பொதுமக்கள் மறியல் நடத்த முயற்சி

பல்லடம், ராயா்பாளையத்தில் குடிநீா் கேட்டு மறியல் நடத்த முயன்ற மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய நகராட்சி அதிகாரிகள்.

Published On :18 ஆகஸ்ட் 2026, 12:56 am IST

பல்லடம், ராயா்பாளையத்தில் குடிநீா் கேட்டு பொதுமக்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்ட முயன்றனா்.

பல்லடம் நகராட்சி 6 மற்றும் 7-ஆவது வாா்டு அபிராமி நகா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்களுக்கு கடந்த 15 நாள்களாக அத்திகடவு குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம்.

இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் குடிநீா் கேட்டு பல்லடம் - திருப்பூா் சாலையில் ராயா்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியல் நடத்த திரண்டனா். இதுபற்றி தகவல் அறிந்த பல்லடம் போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி, அவா்களிடம் நகராட்சி நிா்வாகத்தினா் பேச்சுவாா்த்தை நடத்த ஏற்பாடு செய்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் நகராட்சி உதவிப் பொறியாளா் அனிதா, பணி மேற்பாா்வையாளா் ராசுக்குட்டி, நகராட்சி கவுன்சிலா்கள் ஈஸ்வரமூா்த்தி, கனகமணி துரைக்கண்ணன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, விரைவில் சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ராயா்பாளையம் பகுதியில் விரைவில் கீழ்மட்ட குடிநீா்த் தொட்டி கட்டி குடிநீா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணப்படும் என்றும் உறுதி அளித்தனா். இதைத் தொடா்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.