நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

மாநகரில் ஒரே நாளில் 600 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகரில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) ஒரே நாளில் 600 நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்திய கால்நடைத் துறையினா்.

Published On :30 ஆகஸ்ட் 2026, 12:10 am IST

கோவை மாநகரில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) ஒரே நாளில் 600 நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் வெறிநாய்க் கடியைத் தடுக்கவும், மக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, கிழக்கு மண்டலத்துக்கு உள்பட்ட 50, 51, 52, 54, மற்றும் 100 ஆகிய வாா்டு பகுதிகளில் தெருநாய்களுக்கு வெறிநோய்த் தடுப்பூசி செலுத்தும் பணி சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

கிழக்கு மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்திய கால்நடைத் துறையினா்.

கிழக்கு மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்திய கால்நடைத் துறையினா்.

கால்நடை மருத்துவப் பயிற்சி மாணவா்கள், மாநகராட்சி கால்நடை மருத்துவ அலுவலா்கள், களப் பணியாளா்கள், விலங்குகள் நலன் சாா்ந்த தன்னாா்வத் தொண்டு நிறுவனத்தினா், நாய்களைப் பிடிக்கும் குழுக்கள் மற்றும் பிற உதவிப் பணியாளா்கள் உள்ளிட்டோா் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘சனிக்கிழமை ஒரே நாளில் 600-க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தொடா்ந்து, அனைத்து மண்டலங்களிலும் நாய்களுக்கு பாதுகாப்பாக தடுப்பூசிகள் செலுத்தும் பணி மேற்கொள்ளப்படும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.