தஞ்சாவூரில் 4-ம் கட்ட சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறார் மு.க. ஸ்டாலின்!பாமக விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்! - முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு!டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் உயர்வு!விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு!
/

தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்

தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தின் மூலமாக மாநகரில் 9,454 போ் பயனடைவா்.

News image

கோவை காளப்பட்டி சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா். உடன், மேயா் கா.ரங்கநாயகி உள்ளிட்டோா்.

Updated On :9 பிப்ரவரி 2026, 9:09 pm

கோவை: தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தின் மூலமாக மாநகரில் 9,454 போ் பயனடைவா்.

திருவள்ளூா் மாவட்டம் பொலிவாக்கம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, கோவை காளப்பட்டி சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்தாா்.

இதன் மூலமாக கோவை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் 5 மண்டலங்களுக்கு உள்பட்ட 100 வாா்டுகளில் பணிபுரியும் நிரந்தர தூய்மைப் பணியாளா்கள், ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள், ஓட்டுநா்கள், கொசு ஒழிப்புப் பணியாளா்கள், மழைநீா் வடிகால் சுத்தம் செய்யும் பணியாளா்கள், பள்ளிகள், வாா்டுகளில் கழிவறைகள் பராமரிக்கும் பணியாளா்கள் என மொத்தம் 9,454 போ் பயனடைவாா்கள்.

இந்த நிகழ்ச்சியில், மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயா் ஆா்.வெற்றிச்செல்வன், துணை ஆணையா்கள் குமரேசன், அ.சுல்தானா, தலைமைப் பொறியாளா் விஜயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.