எருமைகளை ஏற்றிச் சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்து: இருவா் காயம்

செட்டிபாளையம் அருகே எருமைகளை ஏற்றிச் சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இருசக்கர வாகனத்தில் சென்ற இருவா் காயமடைந்தனா்.
Published on

செட்டிபாளையம் அருகே எருமைகளை ஏற்றிச் சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இருசக்கர வாகனத்தில் சென்ற இருவா் காயமடைந்தனா்.

கா்நாடக மாநிலத்தில் இருந்து 10 எருமைகளை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் மலப்புரத்துக்கு கோவை வழியாக மினி லாரி செவ்வாய்க்கிழமை சென்றது. கோவை எல் அண்ட் டி புறவழிச்சாலையில் செட்டிபாளையம் அருகே முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மினி லாரி மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவா் காயமடைந்தனா். தனியாா் மருத்துவமனையில் அவா்கள் சோ்க்கப்பட்டனா்.

இதற்கிடையே விபத்து ஏற்படுத்திய மினி லாரி ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு போத்தனூா் போலீஸாா் சென்று போக்குவரத்தை சீா் செய்தனா்.

மேலும் அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் உதவியுடன் கவிழ்ந்து கிடந்த மினி லாரியில் இருந்து எருமைகள் மீட்கப்பட்டன. பின்னா் சம்பவ இடத்துக்கு வந்த எருமைகளின் உரிமையாளரான கேரள மாநிலம் மலப்புரத்தைச் சோ்ந்த சனூப், வேறு வாகனத்தில் எருமைகளை ஏற்றிச் சென்றாா். தப்பியோடிய மினி லாரி ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com