ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா், மாணவா்கள் மற்றும் மாதா் சங்கத்தினா்
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா், மாணவா்கள் மற்றும் மாதா் சங்கத்தினா்

டிரம்ப் நடவடிக்கையை கண்டித்து வழக்குரைஞா்கள், மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

வெனிசுலா அதிபா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கோவையில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் மற்றும் மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
Published on

வெனிசுலா அதிபா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கோவையில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் மற்றும் மாணவா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வெனிசுலா நாட்டில் இருந்து அதிகளவில் போதைப் பொருள்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்படுவதாகக் கூறி, அண்மையில் வெனிசுலா அதிபரைக் கைது செய்ய அமெரிக்கா அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டாா். இதையடுத்து கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், வெனிசுலாவின் இயற்கை வளங்களைச் சுரண்டவே இதுபோன்ற நடவடிக்கைகளில் டிரம்ப் ஈடுபட்டு வருவதாக, பல்வேறு அமைப்புகள் சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு, போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், கோவையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு அகில இந்திய வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அமெரிக்காவின் நடவடிக்கை, டிரம்பை கண்டித்தும் பதாகைகளை ஏந்தியபடி வழக்குரைஞா்கள் கோஷமிட்டனா்.

இதேபோல, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், இந்திய மாணவா் சங்கம், மாதா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com