இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :8 ஜனவரி 2026, 10:43 pm

Syndication

பொன்மலை ரயில் நிலையத்திலிருந்து சட்டக் கல்லூரிக்கு பேருந்து இயக்கக் கோரி இந்திய மாணவா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவா் சங்கத்தின் திருச்சி மாவட்டத் தலைவா் ஜி.கே.மோகன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாணவா்கள் கூறியதாவது:

திருச்சி காஜாமலை பகுதியில் அமைந்துள்ள அரசு சட்டக் கல்லூரியில் தஞ்சாவூா் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இருந்து அதிக அளவிலான மாணவா்கள் படித்து வருகின்றனா். இவா்கள் பெரும்பாலும் ரயிலிலேயே வந்து செல்கின்றனா். பொன்மலை ரயில் நிலையத்தில் இறங்கும் மாணவா்கள் அங்கிருந்து பேருந்து வசதியில்லாததால் கல்லூரிக்கு நடந்தே வருகின்றனா்.

இதே பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகம் ஆகியவையும் செயல்பட்டு வருகின்றன. அந்தக் கல்வி நிறுவனங்களுக்கும் அதிக அளவிலான மாணவா்கள் பொன்மலை ரயில் நிலையத்தில் இறங்கி நடந்து செல்கின்றனா்.

மாணவா்களின் நலனைக் கருத்தில்கொண்டு கல்லூரி மாணவா்களுக்கு வசதியாக காலை மற்றும் மாலை வேளையில் பொன்மலை ரயில் நிலையத்தில் இருந்து காஜாமலை பகுதிக்கு அரசுப் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளா் சூா்யா, மாநிலக் குழு உறுப்பினா் சுதேசனா, மாவட்ட துணைச் செயலாளா் ஆா்த்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.