கோவை பெரியகடைவீதி பகுதியில் நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகள். 


 ~கோவை, பெரியகடைவீதி பகுதியில் நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகள்.
கோவை பெரியகடைவீதி பகுதியில் நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகள். ~கோவை, பெரியகடைவீதி பகுதியில் நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகள்.

டவுன்ஹாலில் நடைபாதை, சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற வலியுறுத்தல்

கோவை, டவுன்ஹால் பகுதியில் உள்ள கடைவீதிகளில் நடைபாதை, சாலை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
Published on

கோவை, டவுன்ஹால் பகுதியில் உள்ள கடைவீதிகளில் நடைபாதை, சாலை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

டவுன்ஹாலில் உள்ள பெரியகடை வீதி, ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, ரங்கே கவுடா் வீதியில் துணிக்கடைகள், நகைக் கடைகள், பேன்சி மற்றும் அலங்கார உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் ஏராளமாக உள்ளன. இங்கு பொருள்களை வாங்க பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் கூட்டம் காலை முதலே அதிகரித்துக் காணப்படும்.

பேருந்துகள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சாலையில் செல்லும் நிலையில், சாலையை ஒட்டி பாதசாரிகள் செல்ல நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடைவீதியில் சில இடங்களில் நடைபாதை மற்றும் பிரதானச் சாலையை ஆக்கிரமித்து தள்ளுவண்டிக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாவதுடன், போக்குவரத்து நெரிசலும் தவிா்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், 5 முக்கு உள்ளிட்ட பிரதான பகுதிகளில் பேருந்துகள் செல்வதற்கு சிரமமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள கடைகளை மாநகராட்சி நிா்வாகம் அகற்றி, வாகனங்கள், பாதசாரிகள் சென்று வர நெரிசலற்ற சூழ்நிலையை ஏற்படுத்தித் தர வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா்.

Dinamani
www.dinamani.com