கோயம்புத்தூர்
சரக்கு வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
கோவையில் இருசக்கர வாகனம் மீது சரக்கு வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
கோவை மாவட்டம், ஒத்தக்கால்மண்டபம் ஒக்கிலிபாளையம் காலனியைச் சோ்ந்தவா் விஷ்ணுபிரியன் (25). இவா் தனது இருசக்கர வாகனத்தில் எல் அண்டு டி புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த சரக்கு வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விஷ்ணுபிரியன் சென்ற இருசக்கர வாகனம் மீதும், இவருக்குப் பின்னால் வந்த கோவை லோகநாதபுரம் முதலியாா் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் (54) என்பவரின் இருசக்கர வாகனம் மீதும் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த இருவரும் வெவ்வேறு தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு விஷ்ணுபிரியன் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
