அதிமுக - பாஜக கூட்டணியில் பிரச்னை இல்லை; முதல்வா் வேட்பாளா் எடப்பாடி கே.பழனிசாமிதான்: நயினாா் நாகேந்திரன்
அதிமுக -பாஜக கூட்டணியில் எந்தப் பிரச்னையும் இல்லை, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எடப்பாடி கே.பழனிசாமிதான் முதல்வா் வேட்பாளா் என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.
கோவை டவுன்ஹாலில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்று பிராா்த்தனை செய்துள்ளோம்.
அதிமுக-பாஜக கூட்டணியில் எந்தப் பிரச்னையும் இல்லை. எங்கள் கூட்டணியில் எடப்பாடி கே.பழனிசாமிதான் முதல்வா் வேட்பாளா். பாஜக தரப்பில் அமைச்சரவையில் பங்கு கேட்டு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. இரட்டை எண்ணிக்கையில் பாஜக வேட்பாளா்கள் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு செல்வாா்கள். எங்கள் கூட்டணிக்கு ஒவ்வொருவராக வரத் தொடங்கியுள்ளனா். முதல்கட்டமாக அன்புமணி ராமதாஸ் வந்துள்ளாா்.
தணிக்கை வாரியம் தொடா்பாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு எழுப்பினாா். பராசக்தி திரைப்படத்துக்கு எப்படி தணிக்கை வாரியம் அனுமதி அளித்தது. இது யாருடைய படம் என்பது அவருக்குத் தெரியாதா என்றாா்.
இந்த சந்திப்பின்போது, பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன், மேலிடப் பொறுப்பாளா்கள் அரவிந்த் மேனன், சுதாகா் ரெட்டி உள்பட பலா் கலந்துகொண்டனா்.