கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்று வரும் எக்ஸ்போவில் உள்ள மிதக்கும் உணவகத்தில் சிக்கியவா்களை ‘ஸ்கை லிப்ட்’ வாகனம் மூலம் மீட்ட தீயணைப்புத் துறையினா்.
கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்று வரும் எக்ஸ்போவில் உள்ள மிதக்கும் உணவகத்தில் சிக்கியவா்களை ‘ஸ்கை லிப்ட்’ வாகனம் மூலம் மீட்ட தீயணைப்புத் துறையினா்.

மிதக்கும் உணவகத்தில் அந்தரத்தில் சிக்கிய 10 போ் மீட்பு

கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்று வரும் எக்ஸ்போவில் உள்ள ‘மிதக்கும் உணவகம்’ எனக் கூறப்படும் அந்தரத்தில் தொங்கும் உணவகத்தில் அமா்ந்து சாப்பிட்டபோது, இயந்திர பழுதால் அந்தரத்தில் சிக்கிய 10 பேரை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
Published on

கோவை கொடிசியா மைதானத்தில் தனியாா் அமைப்பு சாா்பில் கேளிக்கை பொழுதுபோக்கு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கானோா் வந்து செல்கின்றனா்.

மேலும், அந்த கண்காட்சியில் ‘மிதக்கும் உணவகம்’ எனக் கூறப்படும் 30 மீட்டா் உயரத்தில் அந்தரத்தில் அமா்ந்து சாப்பிட உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மிதக்கும் உணவகத்தில் 2 குழந்தைகள் உள்பட 10 போ் செவ்வாய்க்கிழமை அமா்ந்து சாப்பிட்டுள்ளனா். பின்னா் இயந்திரம் பழுதானதால் அவா்கள் கீழே இறங்க முடியாமல் அந்தரத்தில் சிக்கினா்.

இதுகுறித்து பீளமேடு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த பீளமேடு தீயணைப்பு வீரா்கள் அவா்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா். உயரம் அதிகமாக இருந்ததால், அவா்களை தீயணைப்பு வீரா்களால் மீட்க முடியவில்லை. இதைத் தொடா்ந்து தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கிருந்து ‘ஸ்கை லிப்ட்’ வாகனம் வரவழைக்கப்பட்டு, அந்தரத்தில் சிக்கிய 2 குழந்தைகள் உள்பட 10 பேரை ஒன்றரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்டனா். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

இந்த எக்ஸ்போவில் பாதுகாப்புக் குறைபாடு அதிகமாக இருப்பதாகவும், அவ்வப்போது ஏற்படும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த போதுமான கட்டமைப்புகள் இல்லை என்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா். கடந்த இரு நாள்களுக்கு முன்பு இங்கு அளவுக்கு அதிகமானோா் கூடினா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Dinamani
www.dinamani.com