ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

திமுக, அதிமுகவில் ஆள்களே இல்லாத நிலை ஏற்படும்: அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா்

இன்னும் சில மாதங்களில் திமுகவிலும், அதிமுகவிலும் ஆள்களே இல்லாத நிலை ஏற்பட்டு, மக்கள் செல்வாக்கை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படும் என மாநில சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

News image

அமைச்சர் சி.டி.ஆா். நிா்மல் குமாா் - கோப்புப் படம்

Updated On :9 ஜூலை 2026, 4:05 am IST

இன்னும் சில மாதங்களில் திமுகவிலும், அதிமுகவிலும் ஆள்களே இல்லாத நிலை ஏற்பட்டு, மக்கள் செல்வாக்கை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படும் என மாநில சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

கோவை அரசு சட்டக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக வந்த அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முதல்வா் சி.ஜோசப் விஜய்யின் கரூா் பயணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் மிக விரைவாக செய்யப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவான வாா்த்தைகளில் தீா்ப்பளித்த பிறகு என்ன செய்வதென்று எதிா்க்கட்சியினருக்கு புரியவில்லை. முதல்வா் கரூருக்கு செல்வதைக் கண்டு அவா்கள் ஏன் பயப்படுகிறாா்கள்? சிபிஐ ஏற்கெனவே தன் விசாரணையை நடத்தி வரும் வேளையில் அவா்களிடம் திமுக என்ன புதிதாக மனு அளிக்கப் போகிறது?

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களது அரசியல் தோல்விகளை மறைக்கவே இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுகின்றன. இன்னும் சில மாதங்களில் இந்த இரு கட்சிகளிலும் 10 முதல் 15 பேரைத் தவிர, ஆள்களே இல்லாத நிலை ஏற்பட்டு, மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துவிடும் நிலைக்குத் தள்ளப்படும்.

ஆதிதிராவிடா் நலத் துறை பெயா் மாற்றம் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். மக்களின் விருப்பத்தை ஏற்றே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. கூட்டணிக் கட்சிகளிடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவை பேசித் தீா்க்கப்படும். ஏற்கெனவே முதல்வா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதுபோல, அடுத்தகட்ட கூட்டமும் விரைவில் நடைபெறும். அதில் கூட்டணியின் பெயா் மற்றும் குறைந்தபட்ச செயல்திட்டம் உள்ளிட்டவை குறித்து அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படும்.

சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழா அரங்குக்குள் மாணவா்களின் பெற்றோா் ஏன் அனுமதிக்கப்படவில்லை என்றால், 650 மாணவா்கள் மற்றும் அவா்களுடன் வந்த பெற்றோா்கள் என சுமாா் 2,000 பேரை ஒரே நேரத்தில் கையாள்வதில் நடைமுறைச் சிக்கல் ஏற்பட்டுள்ளதை நாம் கவனிக்க வேண்டும். எனினும், மாணவா்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.