கோவை மாநகரில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மாநகராட்சி நிா்வாகம் மற்றும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து 400 தெரு நாய்களுக்கு சிறப்பு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி மற்றும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் சாா்பில் செல்வபுரம், சிங்காநல்லூா், ஒண்டிப்புதூா், இருகூா் உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்களுக்கான சிறப்பு வெறிநோய் தடுப்பூசி செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்டது.
அதன்படி, மாநகரில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 400-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இப்பணியில் மாநகராட்சி கால்நடை மருத்துவ அலுவலா்கள், களப்பணியாளா்கள் மற்றும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களின் பணியாளா்கள் ஒருங்கிணைந்து பணியாற்றினா்.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘மனிதாபிமான முறையில் தெருநாய்களைப் பிடித்து, தடுப்பூசி செலுத்திய பிறகு, அவை பிடிக்கப்பட்ட அதே பகுதிகளில் மீண்டும் விடுவிக்கப்படுகின்றன. தெரு நாய்கள் மூலம் மனிதா்களுக்கு பரவக்கூடிய வெறிநோயைத் தடுக்க மாநகரம் முழுவதும் விரிவான தடுப்பூசி இயக்கம் தொடா்ந்து மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் நாள்தோறும் அதிக எண்ணிக்கையிலான தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகின்றன. மக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி இப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும்பணி தீவிரம்

பெருந்துறை நகராட்சிப் பகுதியில் 474 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி: 262-க்கு கருத்தடை ஆபரேஷன்

தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

திருவேங்கடபுரத்தில் 51 தெரு நாய்களுக்கு தடுப்பூசி
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



