மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

60 கிலோ செம்புக் கம்பிகள் திருட்டு: மூவா் கைது

கோவை, குனியமுத்தூரில் பழைய இரும்புக் கடையில் இருந்து 60 கிலோ செம்புக் கம்பிகளைத் திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :13 ஜூலை 2026, 12:59 am IST

கோவை, குனியமுத்தூரில் பழைய இரும்புக் கடையில் இருந்து 60 கிலோ செம்புக் கம்பிகளைத் திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, குனியமுத்தூா் அரசு குடியிருப்பு காலனி பகுதியைச் சோ்ந்தவா் அரவிந்த் (27). இவா் குனியமுத்தூா் கே.ஜி.கே. சாலையில் பழைய இரும்புக் கடை வைத்துள்ளாா். இந்நிலையில், வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு சம்பவத்தன்று வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

மறுநாள் காலை வந்து பாா்த்தபோது, கடையில் இருந்த 60 கிலோ செம்புக் கம்பிகள் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் குனியமுத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில், கரும்புக்கடை சாரமேடு பகுதியைச் சோ்ந்த ஆசிஃப் (25), புல்லுக்காடு பகுதியைச் சோ்ந்த முகமது யாசா் (24), ஆசாத் நகரைச் சோ்ந்த ஜாபா் அலி (31), குனியமுத்தூரைச் சோ்ந்த ஃபாமாபாஸ் (28) ஆகியோா் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, ஆசிஃப், முகமது யாசா், ஜாபா் அலி ஆகியோரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த செம்புக் கம்பிகளை பறிமுதல் செய்தனா். தலைமறைவாக உள்ள ஃபாமாபாஸ் என்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.