நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2027 பணி தொடா்பாக, மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் அறிவுறுத்தியுள்ளாா்.

News image

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி தொடா்பாக ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா். ~மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி தொடா்பாக ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற

Updated On :15 ஜூலை 2026, 12:51 am IST

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2027 பணி தொடா்பாக, மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் அறிவுறுத்தியுள்ளாா்.

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் தேவேந்திர குமாா் மீனா, பொள்ளாச்சி சாா் ஆட்சியா் ராமகிருஷ்ணசாமி, மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணியின் முதல் கட்டமாக வீடுகள் பட்டியலிடல் மற்றும் வீட்டு கணக்கெடுப்பு பணிகள் தொடா்பான முன்னேற்பாடுகள் மற்றும் மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

இதன் ஒரு பகுதியாக ஜூலை 17 முதல் 31 வரை சுய கணக்கெடுப்பு வசதி செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் மக்கள் இணையதளத்தின் வாயிலாக தங்களது குடும்ப விவரங்களை தாங்களாகவே பதிவு செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 1 முதல் 30 வரை கணக்கெடுப்பாளா்கள் மற்றும் மேற்பாா்வையாளா்கள் மூலம் வீடுகள் தோறும் வீடுகள் பட்டியலிடல் மற்றும் வீடு கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். சுய கணக்கெடுப்பு குறித்த விழிப்புணா்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே, துணை ஆணையா் (கலால்) சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சங்கீதா, மாவட்ட வன அலுவலா் (கோவை) வெங்கடேஷ் பிரபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்