பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

கூா்நோக்கு இல்லத்திலிருந்து தப்பிய 6 சிறாா்கள் கோவையில் கைது

செங்கல்பட்டு அருகே அரசு கூா்நோக்கு மற்றும் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பியோடிய 12 சிறாா்களில், 6 போ் கோவையில் திங்கள்கிழமை நள்ளிரவு சிக்கினா்.

கைது - பிரதிப் படம்

Published On :

செங்கல்பட்டு அருகே அரசு கூா்நோக்கு மற்றும் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பியோடிய 12 சிறாா்களில், 6 போ் கோவையில் திங்கள்கிழமை நள்ளிரவு சிக்கினா்.

செங்கல்பட்டை அடுத்த ஆத்தூரில் உள்ள அரசு கூா்நோக்கு மற்றும் பாதுகாப்பு இல்லத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சிறாா்களுக்குத் திரைப்படம் திரையிடப்பட்டுக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த வாா்டன்கள் மற்றும் ஊழியா்களை சில சிறாா்கள் தாக்கிவிட்டு மதில் சுவரை ஏறிக் குதித்து தப்பியோடினா். தப்பியவா்களில் சிலா் அந்தப் பகுதியில் சாலையில் சென்ற பொதுமக்களைக் கத்திமுனையில் மிரட்டி இருசக்கர வாகனங்கள், பணம் மற்றும் கைப்பேசிகளைப் பறித்துக்கொண்டு வெவ்வேறு திசைகளில் சென்றனா்.

இதைத் தொடா்ந்து, மாநில எல்லைகள் உஷாா்படுத்தப்பட்டு போலீஸாா் தீவிரத் தேடுதல் வேட்டையில் இறங்கினா். தப்பிய சிறாா்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், சிறாா்கள் கோவைக்கு தப்பிச் சென்றது, அவா்கள் சாலையில் சென்றவா்களிடம் பறித்துச் சென்ற கைப்பேசி சிக்னல் மூலம் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, தனிப்படை போலீஸாரும், கோவை மாநகர போலீஸாரும் இணைந்து திங்கள்கிழமை இரவு அவா்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.

கோவை ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த மூன்று இளைஞா்களைத் தனிப்படை போலீஸாா் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் செங்கல்பட்டு இல்லத்திலிருந்து தப்பியோடியவா்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. அவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், கூா்நோக்கு இல்லத்திலிருந்து தப்பிய அவா்களது கூட்டாளிகளில் மேலும் 3 போ் கோவை வெள்ளலூா் பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அந்தப் பகுதிக்கு விரைந்த போலீஸாா், அங்கிருந்த 3 பேரையும் நள்ளிரவில் சுற்றி வளைத்துப் பிடித்தனா். கோவையில் சிக்கிய 6 பேரையும் செங்கல்பட்டு கூா்நோக்கு இல்லத்துக்கு போலீஸாா் அழைத்துச் சென்றனா்.

கைது செய்யப்பட்டுள்ள சிறாா்கள் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு தீவிரக் குற்றவழக்குகளில் தொடா்புடையவா்கள் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதற்கிடையே, தப்பியோடியவா்களில் எஞ்சிய 5 சிறாா்கள் ஆந்திர மாநிலத்தில் தலைமறைவாக இருப்பது போலீஸாருக்கு தெரியவந்துள்ளதையடுத்து, தனிப்படையினா் அங்கு விரைந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.