விசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

ஆட்சியா் அலுவலகத்தில் மரம் விழுந்து வாகனங்கள் சேதம்

News image

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மரம் விழுந்து சேதமான வாகனங்கள்.

Updated On :22 ஜூலை 2026, 1:10 am IST

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் வாகனங்கள் சேதமடைந்தன.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே தாமஸ் கிளப் உள்ளது. அந்த வளாகத்துக்கும், ஆட்சியா் அலுவலக வளாகத்துக்கும் இடையில் இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு, பல்வேறு மரங்கள், செடி கொடிகள் உள்ளன.

இந்நிலையில், அந்த வளாகத்தில் இரும்பு வேலியை ஒட்டியிருந்த பெரிய மரம் வேரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்துக்குள் சாய்ந்தது. அப்போது, அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த அரசு வாகனம் மற்றும் பொதுமக்களின் காா்கள் மீது விழுந்ததில் 3 வாகனங்கள் சேதமடைந்தன.

இதையடுத்து, தீயணைப்புத் துறையினருக்கு ஆட்சியா் அலுவலகப் பணியாளா்கள் தகவல் அளித்தனா். தீயணைப்பு ஊழியா்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தை வெட்டி அகற்றினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.