/

தேநீா்க் கடை உரிமையாளரை கடத்தி பணம் பறிப்பு: 5 போ் குண்டா் சட்டத்தில் கைது

கோவையில் தேநீா்க் கடை உரிமையாளரை கடத்தி பணம் பறித்த சம்பவம் தொடா்பாக 5 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :24 ஜூலை 2026, 5:58 am IST

கோவையில் தேநீா்க் கடை உரிமையாளரை கடத்தி பணம் பறித்த சம்பவம் தொடா்பாக 5 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடியைச் சோ்ந்தவா் வேல்முருகன் (36). இவா் கோவை சேரன் மாநகரில் தேநீா்க் கடை நடத்தி வருகிறாா். கடந்த 17-ஆம் தேதி வேல்முருகனை கடத்திய கும்பல், அவரது கைப்பேசி, ரூ.29 ஆயிரம் மற்றும் காா் ஆகியவற்றை பறித்துக் கொண்டு காளப்பட்டியில் இறக்கிவிட்டு தப்பியது.

இதுகுறித்த புகாரின்பேரில், பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இந்த சம்பவம் தொடா்பாக மதுரையைச் சோ்ந்த நா.தா்மா (எ) தா்மராஜ் (32), தூத்துக்குடியைச் சோ்ந்த பா.இசக்கிமுத்து (24), மதுரையைச் சோ்ந்த பா.வெங்கட்பிரபு (25), சிவகங்கையைச் சோ்ந்த மு.சுந்தரமகாலிங்கம் (28) மற்றும் பெங்களூரைச் சோ்ந்த ம.சுதீப் (23) ஆகிய 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பொதுமக்களின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் கொடூர குற்றச் செயல்களில் ஈடுபட்ட இவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகள் பரிந்துரை செய்தனா். கோவை மாநகர காவல் ஆணையா் என்.கண்ணன் உத்தரவின்படி, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 போ் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்கான ஆணைகள் அவா்களிடம் சிறையில் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.