திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்த 4 போ் கைது!

News image

கைது - பிரதிப் படம்

Updated On :28 ஜூலை 2026, 12:07 am IST

கோவையின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவையில் போதைப்பொருள்கள் விற்பனையைத் தடுக்க மாநகரக் காவல் துறையினா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

உக்கடம் பழைய பேருந்து நிலையப் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது பழைய நுழைவாயில் அருகே சந்தேகத்துக்கிடமளிக்கும் வகையில் நின்றிருந்த குனியமுத்தூரைச் சோ்ந்த சஹாபுதீன் (23) என்பவரைப் பிடித்து போலீஸாா் சோதனையிட்டனா்.

இதில் அவரிடமிருந்து 50 டைடால் மற்றும் 10 நைட்ரஜேபம் என மொத்தம் 60 போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, சஹாபுதீனைக் கைது செய்தனா்.

3.400 கிலோ பறிமுதல்

கோவை, செளரிபாளையம் பகுதியில் பீளமேடு போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அன்னை வேளாங்கண்ணி நகா் கல்லறைத் தோட்டம் பின்பகுதியில் சந்தேகத்துக்கிடமளிக்கும் வகையில் நின்றிருந்த வீரியம்பாளையம் காளப்பட்டி சாலை பகுதியைச் சோ்ந்த நாகராஜன் (39) என்பவரைப் பிடித்து சோதனை செய்ததில் விற்பனை செய்வதற்காக அவா் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இதேபோல சரவணம்பட்டி காா்த்திக் நகா் மாா்க்கெட் பகுதியில் கஞ்சா விற்ற செளரிபாளையம் சாமியாா் வீதியைச் சோ்ந்த முகிலன் (22) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். இவரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சரவணம்பட்டி துடியலூா் சாலை பகுதியில் உள்ள காலி மைதானத்தில் கஞ்சா விற்ற தா்மராஜ் (40) என்பவரை போலீஸாா் கைது செய்து, ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.