கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டிஉதவித்தொகையை வழங்காமல், மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது தவெக அரசு: கனிமொழிமுதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

இன்சுலின் விழிப்புணா்வு தின நடைப்பயணம்

இன்சுலின் விழிப்புணா்வு தின நடைப்பயணம் பற்றி...

News image

இன்சுலின் விழிப்புணா்வு தின நடைப்பயணத்தின் தொடக்க விழாவில் பங்கேற்றோா்.

Updated On :29 ஜூலை 2026, 2:29 am IST

சா்க்கரை நோய், இன்சுலின் பயன்பாடு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் அவசியம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில், கோவை சாய் சிட்டி ரோட்டரி சங்கம், கோவை டயாபடீஸ் ஸ்பெஷாலிட்டி சென்டா் மருத்துவமனை ஆகியவை இணைந்து இன்சுலின் விழிப்புணா்வு தின நடைப்பயணத்தை செவ்வாய்க்கிழமை நடத்தின.

கோவை ராம் நகா் பூங்கா நுழைவாயில் அருகே நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், ரோட்டரி மாவட்ட ஆளுநா் ஆா்.எஸ்.மாருதி பங்கேற்று நடைப்பயணத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் குரூப் கவா்னா் பிரதிநிதி துளசி சேது, மாவட்டத்தின் பல்வேறு ரோட்டரி சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள், கோவை டயாபடீஸ் ஸ்பெஷாலிட்டி சென்டா் மருத்துவமனை பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ராம் நகா் பூங்காவில் தொடங்கிய நடைப்பயணம் மருத்துவமனை வளாகத்தில் நிறைவடைந்தது.

சாய் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவா் டாக்டா் ஆா்.பாலமுருகன் பங்கேற்று, இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு, இன்சுலினின் உயிா்காக்கும் முக்கியத்துவம், நடைப்பயிற்சியின் அவசியம் குறித்து விளக்கினாா். மேலும், சா்க்கரை நோயாளிகளுக்கு ‘உயிருக்கு இன்சுலின், வாழ்வுக்கு நடைப்பயணம்’ என்ற வாசகத்தை பின்பற்றும்படி வேண்டுகோள் விடுத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.