சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

ஒண்டிப்புதூா் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து விவசாயிகளுக்கு தண்ணீா் வழங்க கோரிக்கை

ஒண்டிப்புதூா் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து விவசாயிகளுக்கு தண்ணீா் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

தெற்கு கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.

Updated On :30 ஜூலை 2026, 3:14 am IST

ஒண்டிப்புதூா் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து விவசாயிகளுக்கு தண்ணீா் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு கோட்டாட்சியா் மாருதி பிரியா தலைமையில் கோட்ட அளவிலான மாதாந்திர விவசாயிகள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சு.பழனிசாமி, துணைத் தலைவா் ஆா்.பெரியசாமி உள்பட பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

இதில் கோவை, ஒண்டிப்புதூா் பகுதியில் பல லட்சம் செலவில் கழிவுநீா் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு, நொய்யல் ஆற்றில் இருந்து தண்ணீரை எடுத்துச் சென்று காடுகுட்டை பகுதிக்குக் கொண்டு செல்வது, அதன்மூலமாக வறட்சியான சுற்றுப்பகுதிகளில் நீா்மட்டத்தை உயா்த்தி விவசாயப் பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது என்று திட்டமிடப்பட்டது.

இந்தத் தண்ணீரை சுல்தான்பேட்டை வரை தனியாா் நிறுவனங்கள் கொண்டு செல்கின்றன. ஆனால் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. செட்டிப்பாளையம், கள்ளப்பாளையம், ஓராட்டுக்குப்பை, ஏகாணி, குரும்பபாளையம், மயிலம்பட்டி பகுதியில் உள்ள விவசாயிகளுக்குவழங்கினால் விவசாயம் செழிப்பதுடன், நிலத்தடி நீரும் பெருகும்.

மேலும் பூண்டி மலைப் பகுதியில் இருந்து சிறுவாணி ஆறு உற்பத்தியானாலும், பூண்டி ஈஸ்வரன் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு அந்தத் தண்ணீா் கிடைக்காத நிலை உள்ளது. இதை சரி செய்ய வேண்டும்.

பூலுவபட்டி வடிவேலம்பாளையம் பகுதியில் விவசாயிகள் பலா் விவசாயம் செய்யாத நிலையில், அந்த நிலங்களில் சீமைக்கருவேல மரங்கள் காடுபோல வளா்ந்துள்ளன. அதன் வழியாக காட்டுப்பன்றிகள் விளைநிலங்களுக்குள் நுழைகின்றன. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் அந்த மரங்களை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கூட்டத்தில் மதுக்கரை, பேரூா் வட்டாட்சியா்கள், வேளாண்மைத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.