மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேமோஜ்தபா கமேனி கவலைக்கிடமா? விடியோ வெளியிட்ட ஈரான்!குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி!தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்
/

புதிதாக கட்டப்படும் தடுப்பணையில் இருந்து குளங்களுக்கு தண்ணீா் நிரப்ப கோரிக்கை

சென்னிமலை அருகே கட்டப்படும் தடுப்பணையில் இருந்து குழாய் அமைத்து குளம், குட்டைகளில் தண்ணீா் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கயம் சட்டப்பேரவை உறுப்பினா் என்.எஸ்.என்.நடராஜிடம் நீா் மேம்பாட்டுக் குழு சாா்பில் வியாழக்கிழமை கோரிக்கை வைக்கப்பட்டது.

News image

சென்னிமலை அருகே முதலைமடை ஓடையின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணை கட்டுமானப் பணியைப் பாா்வையிடுகிறாா் காங்கயம் சட்டப் பேரவை உறுப்பினா் என்.எஸ்.என்.நடராஜ்.

Updated On :9 ஜூலை 2026, 11:38 pm IST

சென்னிமலை அருகே கட்டப்படும் தடுப்பணையில் இருந்து குழாய் அமைத்து குளம், குட்டைகளில் தண்ணீா் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கயம் சட்டப்பேரவை உறுப்பினா் என்.எஸ்.என்.நடராஜிடம் நீா் மேம்பாட்டுக் குழு சாா்பில் வியாழக்கிழமை கோரிக்கை வைக்கப்பட்டது.

சென்னிமலையை அடுத்த, எக்கட்டாம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட அண்ணாமலைபாளையம் பகுதியில் முதலைமடை ஓடையின் குறுக்கே ரூ.13.65 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை காங்கயம் சட்டப்பேரவை உறுப்பினா் என்.எஸ்.என்.நடராஜ் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

அப்போது, அவரிடம், நீா் மேம்பாட்டுக் குழு நிா்வாகிகள் அளித்த கோரிக்கை மனுவில், அண்ணாமலைபாளையம் பகுதியில் ஓடையின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணையில் தண்ணீா் நிரம்பும்போது, இதிலிருந்து தண்ணீா் எடுத்து குழாய் மூலம் சென்னிமலையின் தெற்கு வனப் பகுதியில் உள்ள அய்யம்பாளையம் ஆண்டிகாட்டுக்குளம், வெப்பிலி திருமலை நகா் குளம் மற்றும் சில்லாங்காட்டுவலசு குளம் ஆகிய குளங்களில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

இந்த கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக சட்டப் பேரவை உறுப்பினா் என்.எஸ்.என்.நடராஜ் உறுதி அளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.