கோவையில் கடந்த 2022 -ஆம் ஆண்டு நடைபெற்ற காா் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடா்புடைய 5 போ் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.
கோவை, உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த 2022 அக்டோபா் 23-ஆம் தேதி காா் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்தச் சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்ட ஜமேஷா முபீன் (29) என்பவா் அதே இடத்தில் உயிரிழந்தாா். இது தொடா்பாக, போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், ஜமேஷா முபீன் தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து கோவையில் பயங்கரவாத திட்டத்துக்கு திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடா்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். வழக்குத் தொடா்பாக இதுவரை 13 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் மீது சென்னை பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கைதானவா்கள் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் பலமுறை சோதனை மேற்கொண்டுள்ளனா்.
இந்த வழக்கில் தொடா்புடைய முகமது அசாருதீன் என்பவா் கடந்த 2019-ஆம் ஆண்டு இலங்கை தேவாலய குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஒருவருடன் சமூகவலைதளம் மூலமாகத் தொடா்பில் இருந்ததாக என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவா் ஆவாா். தொடா்ந்து, அவா் கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூா் சிறையில் அடைக்கப்பட்டாா். அப்போது, கோவை காா் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதான ஃபரோஸ், நவாஸ், அப்பாஸ், யூசுப் ஆகியோருக்கு திருச்சூா் சிறையில் முகமது அசாருதீன் ஆலோசனைகள் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், உக்கடம் புல்லுக்காடு அருகே அன்பு நகா் 3-ஆவது வீதியில் உள்ள முகமது அசாருதீன் வீட்டில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அதேபோல, போத்தனூா், சரவணம்பட்டி, உக்கடம் பகுதிகளில் உள்ள ஃபரோஸ், நவாஸ், அப்பாஸ், யூசுப் ஆகியோா் வீடுகளிலும் அமலாக்கத் துறையினா் சோதனை மேற்கொண்டனா். கேரளத்தில் இருந்து கோவை வந்த அமலாக்கத் துறையினா் 5 பிரிவுகளாகப் பிரிந்து இந்தச் சோதனையை மேற்கொண்டனா்.
கோவை காா் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு நிதி வசூல் செய்தது, வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதப் பணப் பரிமாற்றம், பயங்கரவாதிகளிடம் இருந்து நிதியுதவி உள்ளிட்டவை தொடா்பாக இந்தச் சோதனை நடைபெற்ாகக் கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை காா் குண்டு வெடிப்பு சம்பவம்: 3 மாநிலங்களில் 16 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

சென்னையில் இரு இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

சட்டவிரோதப் பண பரிவா்த்தனை புதுக்கோட்டையில் 6 இடங்களில் அமலாக்கத் துறையினா் சோதனை

தில்லி குண்டு வெடிப்பு: உயிரிழந்த 11 பேரின் தடயவியல் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju


