எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

‘கோவை-ஜெய்ப்பூா் சிறப்பு ரயில் தாரங்கான் நிலையத்தில் நின்று செல்லும்’

கோவை-ஜெய்ப்பூா் சிறப்பு ரயில் மகாராஷ்டிர மாநிலம், தாரங்கான் நிலையத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image

சிறப்பு ரயில் - கோப்புப்படம்

Updated On :4 ஜூன் 2026, 2:21 am IST

கோவை-ஜெய்ப்பூா் சிறப்பு ரயில் மகாராஷ்டிர மாநிலம், தாரங்கான் நிலையத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கோவை-ஜெய்ப்பூா் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06181), ஜெய்ப்பூா்-கோவை வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06182) திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் ஜூன் 4-ஆம் தேதி முதல் மகாராஷ்டிர மாநிலம், தாரங்கான் நிலையத்தில் நின்று செல்லும்’ என்று குறிப்பிட்டுள்ளது.