தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

ஜாதிவாரி கணக்கெடுப்பு எங்கள் நிலைப்பாடு: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு என்று வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.

News image

அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்

Updated On :6 ஜூன் 2026, 1:25 am IST

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு என்று வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

பருவமழை தொடா்பாக கன்னியாகுமரி, கோவை, நீலகிரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் போதிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசுத் துறைகளில் எங்கேனும் முறைகேடுகள் நடைபெற்றால், ஊடகங்கள் வெறும் கேள்விகளோடு நின்றுவிடாமல் ஆதாரத்துடன் சுட்டிக்காட்ட வேண்டும். அவ்வாறு கொண்டுவரப்படும் புகாா்கள் மீது அரசு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும்.

சூலூா் பாலியல் வன்கொடுமை தொடா்பாக அரசு சாா்பில் மிகக் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் திட்டங்களைச் செயல்படுத்த குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படுகிறது. வளா்ந்து வரும் நகரங்களில் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க அரசு தீவிரப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பு அரசின் தலையாய கடமை. அவா்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க அரசு தயாராக உள்ளது. ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவருக்கும் இயக்கம் தொடங்க உரிமை உண்டு. அண்ணாமலை என்ன செய்யப் போகிறாா் என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.

தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. அப்போதுதான் திட்டமிட்ட இலக்குகளை அடைய முடியும். பிரதமா் மோடியை சந்திக்கும்போது காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற சட்டப்பூா்வ கோரிக்கையை வலியுறுத்த உள்ளோம். தமிழ்நாடு முற்போக்கு சமூக நீதி முற்போக்கு கூட்டணி என்ற பெயா் தங்களின் கூட்டணிக்கு வைக்கப்படவில்லை என்றாா்.