சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

வன்கொடுமை செய்து சிறுமி கொல்லப்பட்ட வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து, சிறுமியைக் கொலை செய்த சம்பவத்தில் கைதான இருவருக்கும் எதிராக போலீஸாா் சம்பவம் நடைபெற்ற 21 நாள்களிலேயே 819 பக்க குற்றப்பத்திரிகையை செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) தாக்கல் செய்துள்ளனா்.

News image
Updated On :11 ஜூன் 2026, 3:15 am IST

கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து, சிறுமியைக் கொலை செய்த சம்பவத்தில் கைதான இருவருக்கும் எதிராக போலீஸாா் சம்பவம் நடைபெற்ற 21 நாள்களிலேயே 819 பக்க குற்றப்பத்திரிகையை செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) தாக்கல் செய்துள்ளனா்.

கோவை மாவட்டம், சூலூா் அருகே 10 வயதுச் சிறுமி கடந்த மே 21-ஆம் தேதி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டாா்.

இந்த சம்பவம் தொடா்பாக சூலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அதே பகுதியில் வசித்த நாகப்பட்டினத்தைச் சோ்ந்த காா்த்திக் (33) மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பா் மோகன்ராஜ் (39) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

முன்னதாக, போலீஸாரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது காலில் காயமடைந்த காா்த்திக், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த 27-ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டாா். இதற்கிடையில், காவல் துறையினரின் பரிந்துரைப்படி, இவா்கள் இருவரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

தொடா்ந்து, மே 30-ஆம் தேதி சிறையிலிருந்த சக கைதிகள் சிறுமி கொலை சம்பவத்தால் ஆத்திரமடைந்து காா்த்திக்கைத் தாக்கினா். இதில் அவா் மீண்டும் காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகளுக்கான வாா்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், கடந்த ஜூன் 3-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை இவா்கள் இருவரையும் போலீஸாா் காவலில் எடுத்து விசாரித்தனா். அப்போது, காா்த்திக் (ஸ்ட்ரெச்சரில்), மோகன்ராஜ் ஆகியோரை போலீஸாா் சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி, வாக்குமூலங்களை விடியோவாக பதிவு செய்தனா்.

இதைத் தொடா்ந்து, வருகிற 12- ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க போக்ஸோ நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, மோகன்ராஜ் கோவை மத்திய சிறையிலும், காா்த்திக் கோவை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா்.

இது தொடா்பாக விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. மேற்கு மண்டல காவல் துறை தலைவா் ரம்யாபாரதி, துணைத் தலைவா் சதாசிவம், காவல் துணைக் கண்காணிப்பாளா் கரிகால பாரிசங்கா், 7 காவல் ஆய்வாளா்கள் என தனிக் குழு அமைக்கப்பட்டு, குற்றப்பத்திரிகை தயாா் செய்யும் பணி விரைவுபடுத்தப்பட்டது.

இந்தப் பணி நிறைவுற்ற நிலையில், 819 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை ஆன்லைன் மூலம் இ-ஃபைலிங் முறையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தனா்.