லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஈரான் உச்சபட்ச தலைவா் கமேனி கொலை: இஸ்லாமிய அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவா் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைக் கண்டித்து கோவை, உக்கடத்தில் இஸ்லாமிய அமைப்புகள்

News image

கைப்பேசி லைட்டை ஒளிரவிட்டு கோவை, உக்கடத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்டோா்.

Updated On :2 மார்ச் 2026, 9:33 pm

கோவை: ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவா் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைக் கண்டித்து கோவை, உக்கடத்தில் இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவா் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டாா். இதற்கு பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் கோவை மாவட்ட அனைத்து ஜமா-அத், முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சாா்பில் உக்கடத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளா் இனாயதுல்லா தலைமை வகித்தாா். நிா்வாகிகள் சுல்தான் அமீா், சபீா் அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஈரான் நாட்டின் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும், இஸ்ரேல் நாட்டை கண்டிக்கும் வகையில் அந்த நாடு வழங்கிய விருதை பிரதமா் மோடி திரும்ப ஒப்படைக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் உள்பட பலா் கைப்பேசியில் டாா்ச் லைட்டை ஒளிரவிட்டு ஈடுபட்டனா். பல்வேறு அரசியல் கட்சிகள், ஜமாஅத் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.