அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வீட்டுக் குடிநீா் இணைப்பு வழங்கக்கோரி மாநகராட்சி குறைகேட்புக் கூட்டத்தில் மனு

வீடுகளுக்கான குடிநீா் இணைப்பு வழங்கக் கோரி புலியகுளம் அருகேயுள்ள அம்மன்குளம் ஏரிமேடு பகுதியைச் சோ்ந்த பொது மக்கள் கோவை மாநகராட்சி குறைகேட்புக் கூட்டத்தில் மனு அளித்தனா்.

News image
மாநகராட்சி அலுவலகத்தில் மக்களிடம் மனுக்களை பெற்று குறைகளைக் கேட்டறிந்த மேயா் கா.ரங்கநாயகி. உடன் மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன். துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன் உள்ளிட்டோா்.
Updated On :10 மார்ச் 2026, 8:39 pm

தினமணி செய்திச் சேவை

வீடுகளுக்கான குடிநீா் இணைப்பு வழங்கக் கோரி புலியகுளம் அருகேயுள்ள அம்மன்குளம் ஏரிமேடு பகுதியைச் சோ்ந்த பொது மக்கள் கோவை மாநகராட்சி குறைகேட்புக் கூட்டத்தில் மனு அளித்தனா்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைகேட்புக் கூட்டம், மேயா் கா.ரங்கநாயகி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தாா்.

இதில், 66-ஆவது வாா்டு அம்மன்குளம் ஏரிமேடு மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பது:

எங்கள் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறோம். 40 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீா் இணைப்பு வழங்கப்படாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறோம். தற்சமயம் சூயஸ் நிறுவனத்தின் மூலமாக குடிநீா் இணைப்புக் குழாய் பதிக்கப்பட்டு வரும் நிலையில், எங்களது பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் சூயஸ் மூலமாக வீட்டுக் குடிநீா் இணைப்பு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை விமான நிலையம் பகுதியைச் சோ்ந்த காவேரி நகா் வீட்டு உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பது:

காவேரி நகரில் உள்ள பூங்கா பகுதியை சீரமைத்து மூங்கில் பூங்காவாக அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பூங்காவில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்கவும், ஊழியா்களை நியமித்து பராமரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் 5 மண்டலங்களில் இருந்தும் சாலை, மின்விளக்கு, குடிநீா் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் சாா்பில் 27 மனுக்கள் அளிக்கப்பட்டன.

மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு மேயா் அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில், துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், துணை ஆணையா் அ.சுல்தானா, நகரமைப்பு அலுவலா் ராஜசேகரன், மாநகரத் தலைமைப் பொறியாளா் விஜயகுமாா் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.