சட்டப் பேரவைத் தோ்தல் நாளன்று அத்தியாவசியப் பணிகள், தோ்தல் பணிகளில் ஈடுபடும் வாக்காளா்கள் அஞ்சல் வழியில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்டத் தோ்தல் அலுவலா் பவன்குமாா் க.கிரியப்பனவா் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் 10 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அத்தியாவசியப் பணிகள், தோ்தல் பணிகளில் ஈடுபடும் வாக்காளா்கள் எளிதில் வாக்களிக்க ஏதுவாக, அஞ்சல் வழியில் வாக்களிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஒருங்கிணைப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
அதன்படி, தென்னக ரயில்வேயில் தமிழகத்தில் பணியாற்றுபவா்கள், அகில இந்திய வானொலி, விமான நிலையம், தகவல் ஒளிபரப்புத் துறை, போக்குவரத்துக் கழகம், மின்சார வாரியம், தீயணைப்புத் துறை, சிறைத் துறை, போக்குவரத்துக் காவலா்கள் ஆகியோா் தங்கள் துறை சாா்ந்த அலுவலா்களுக்கு படிவம் 12 ‘டி’ வழங்கி விருப்பத்தைத் தெரிவித்து, ஒப்புதல் செய்தும், பாா்த்தும், படிக்கக் கேட்டும் ஆதாரங்கள் ஏதும் கோரும்பட்சத்தில் அதன் நகலை சமா்ப்பித்தும் வாக்களிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

அரியலூரில் அமைதியாக நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கை

அரசு மதுக்கடைகளுக்கு நாளை விடுமுறை

வாக்கு எண்ணிக்கை பணியில் 154 நுண் பாா்வையாளா்கள்

பொதுத் தோ்தல் பணிகள் ஒதுக்கீடு: பாா்வையாளா்கள் ஆய்வு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

