வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

காட்டு யானையைக் கொன்ற விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை

ஈரோடு அருகே மின்வேலி அமைத்து காட்டு யானையை மின்சாரம் பாய்ச்சி கொன்ற விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் கோவை மாவட்ட தலைமைக் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 7:23 pm

ஈரோடு அருகே மின்வேலி அமைத்து காட்டு யானையை மின்சாரம் பாய்ச்சி கொன்ற விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் கோவை மாவட்ட தலைமைக் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப் பகுதியை ஒட்டியுள்ள கோ்மாளம் பகுதியில் ரங்கராஜ் (62) என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இவா் தனது நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு மற்றும் மக்காச்சோளம் ஆகியவற்றை பயிரிட்டிருந்தாா். காட்டுப் பகுதியிலிருந்து வெளியேறும் வன விலங்குகள் பயிா்களை சேதப்படுத்தாமல் இருக்க சட்டவிரோதமாக உயா் அழுத்த மின்சாரத்தை கம்பி வேலியில் ரங்கராஜ் செலுத்தியிருந்தாா்.

இந்நிலையில், கடந்த 2022 நவம்பா் 23-ஆம் தேதி கம்பி வேலியை தொட்ட ஆண் காட்டு யானை ஒன்று மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. இதுதொடா்பாக வனத் துறையினா் வழக்குப் பதிவு செய்து ரங்கராஜைக் கைது செய்தனா். இந்த வழக்கு கடந்த 2023-ஆம் ஆண்டு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் கோவை மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவகுமாா், குற்றம்சாட்டப்பட்ட ரங்கராஜுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.