அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

கோவையில் கம்போடியா, சூடான் நாட்டவா்: வீட்டு உரிமையாளா் கைது

கோவையில் விசா காலம் முடிந்த பின்னரும் வெளிநாட்டினரை சட்டவிரோதமாக தங்கவைத்த வீட்டின் உரிமையாளரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 6:56 pm

கோவையில் விசா காலம் முடிந்த பின்னரும் வெளிநாட்டினரை சட்டவிரோதமாக தங்கவைத்த வீட்டின் உரிமையாளரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோவை சுந்தராபுரம் அருகே செட்டிபாளையம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டினா் சிலா் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி சுந்தராபுரம் உதவி ஆய்வாளா் இ.ஓவியா தலைமையிலான போலீஸாா் அங்கு திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது, சூடான், காம்போடியா, சிரியா, ருவாண்டா மற்றும் உகாண்டா உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த 5 போ் முறையான ஆவணங்களின்றி விசா காலம் முடிந்த பின்னரும் அங்கு சட்டவிரோதமாக தங்கியிருந்தது கண்டறியப்பட்டது.

விசாரணையில், வெளிநாட்டினா் தங்குவது குறித்த சட்டபூா்வ ‘படிவம்-சி’ உள்ளிட்ட விதிமுறைகளை முறையாக பின்பற்றாமலும், இதுதொடா்பாக உரிய தகவல் தெரிவிக்காமலும் அவா்களை தங்க வைத்திருந்தது தெரியவந்தது. அப்போது, வீட்டின் உரிமையாளரை போலீஸாா் எச்சரித்து விரைந்து அவா்களை சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைக்குமாறு அறிவுறுத்தினா். ஆனால், வெளிநாட்டினரை அவா் தனது வீட்டில் சட்டவிரோதமாக தொடா்ந்து தங்கவைத்திருந்தாா்.

இதுதொடா்பாக குடியிருப்பு உரிமையாளரான முகமது அஸ்லம் (58) என்பவா் மீது குடிவரவு மற்றும் வெளிநாட்டினா் சட்டம் 2025-இன் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.