டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!தவெக ஆட்சியில் அனைத்தையும் முடிவு செய்வது ஜோசியர்தான்! மு.க. ஸ்டாலின்முதல்வர் பணி 10 - 5 வேலை அல்ல; சனி, ஞாயிறு விடுமுறை! விஜய்யை விமர்சித்த மு.க. ஸ்டாலின்இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாக சுதந்திரமாக செல்லலாம்: ஈரான் அறிவிப்பு!ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

மாவட்டத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு 31% குறைவு

கோவை மாவட்டத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் 31 சதவீதமாக குறைந்திருப்பதாக சாலைப் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அபய் மனோகா் சப்ரே. உடன், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் உள்ளிட்டோா்.

Updated On :

கோவை மாவட்டத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் 31 சதவீதமாக குறைந்திருப்பதாக சாலைப் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும் உச்சநீதிமன்ற சாலைப் பாதுகாப்பு குழுத் தலைவருமான அபய் மனோகா் சப்ரே தலைமையில், சாலைப் பாதுகாப்பு குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் ரம்யா பாரதி, மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா உள்ளிட்ட பல்வேறு துறைகளின் தலைமை அலுவலா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் பேசும்போது, மாவட்ட நிா்வாகம், காவல் துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட துறைகளின் சாா்பில் சாலை விபத்துகள் தடுப்பது குறித்து பள்ளி, கல்லூரிகளில் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் ஆய்வுக் கூட்டம் நடைபெறுவதையும், தனியாா், தொண்டு நிறுவனங்கள் சாா்பில் சாலைப் பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதையும் விளக்கினாா்.

கூட்டத்தில் உச்சநீதிமன்ற சாலைப் பாதுகாப்பு குழுத் தலைவா் அபய் மனோகா் சப்ரே பேசும்போது, தமிழ்நாடு அரசு பொதுமக்களிடையே சாலைப் பாதுகாப்பு, சாலை விதிகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தவும், சாலை விபத்துகள் நடக்காமல் தடுக்கவும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கோவை மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டங்கள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டைக் காட்டிலும் சாலை விபத்தில் 31 சதவீதம் உயிரிழப்புகள் குறைந்துள்ளதை பாராட்டும் நேரத்தில், உயிரிழப்புகளே இல்லாத நிலையை அடைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அனைவரும் சாலை விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு விதிகளை முழுமையாகப் பின்பற்றவும் அதனை செயல்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வாகனம் ஓட்டும்போது இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் தலைக்கவசம் அணியவும், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணிவதையும் உறுதி செய்ய வேண்டும்.

மேலும், வாகனம் ஓட்டும்போது கைப்பேசி பயன்படுத்தாமல் இருப்பது, சாலை விதிமுறைகளை முறையாக கடைப்பிடிப்பது போன்றவற்றின் மூலம் விபத்துகள் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளலாம். சாலை விபத்துகளைக் குறைப்பது நமது இலக்கு மட்டுமல்ல ஒவ்வொரு உயிரையும் காப்பது நமது கடமையாகும்.

மேலும், கோவை மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாக பின்பற்றவும், செயல்படுத்தவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எனவே, அனைத்துத் துறைகளும் சாலைப் பாதுகாப்பினை சிறப்பாக கையாளும் பொருட்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.