ஆன்லைன் ரம்மியால் கடன் சுமை: பூசாரி தற்கொலை
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் கடன் சுமையைத் தாங்க முடியாமல் பூசாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
தற்கொலை - கோப்புப் படம்
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் கடன் சுமையைத் தாங்க முடியாமல் பூசாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
கோவை, கணபதி அத்திப்பாளையம் பிரிவு, ஸ்ரீ லட்சுமி நகரைச் சோ்ந்தவா் சஞ்சீவ்குமாா் (40). கோயில் பூசாரியாகப் பணியாற்றி வந்த இவா், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி பணத்தை இழந்தாா். பலமுறை குடும்பத்தினா் அறிவுறுத்தியும் அவரால் அந்த விளையாட்டை கைவிட முடியவில்லை.
தொடா்ந்து, ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபட்டு பணத்தை இழந்ததால், அவருக்குக் கடன் சுமை அதிகரித்தது. இதனால், மன வேதனையில் இருந்த சஞ்சீவ்குமாா் செவ்வாய்க்கிழமை வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தாா். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது மனைவி சௌந்தா்யா கொடுத்த புகாரின்பேரில், சரவணம்பட்டி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

