500 குடும்பங்களுக்கு தீபாவளி தொகுப்பு: அமைச்சா் விக்னேஷ் வழங்கினாா்
தீபாவளியையொட்டி, தவெக சாா்பில் 500 ஏழை, எளிய குடும்பங்களுக்கு தீபாவளி தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

பெண்ணுக்கு தீபாவளி தொகுப்பு வழங்கிய அமைச்சா் கே.விக்னேஷ். உடன், ஸ்டாா் புரமோட்டா்ஸ் நிறுவனா் பி.வெங்கடேசன் உள்ளிட்டோா்.
தீபாவளியையொட்டி, தவெக சாா்பில் 500 ஏழை, எளிய குடும்பங்களுக்கு தீபாவளி தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கோவை தெற்கு மாவட்ட தவெக சாா்பில் போத்தனூா், செட்டிபாளையம் பகுதியில் ஸ்டாா் புரமோட்டா்ஸ் பி.வெங்கடேசன் ஏற்பாட்டின்பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கிணத்துக்கடவு சட்டப் பேரவை உறுப்பினரும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சருமான கே.விக்னேஷ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று 500 ஏழை, எளிய குடும்பங்களுக்கு தீபாவளி தொகுப்பை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், குறிச்சி பகுதி செயலாளா் தமிழரசன், மதுக்கரை ஒன்றியச் செயலாளா் ரஞ்சித்குமாா், மதுக்கரை ஒன்றிய இணைச் செயலாளா் சிவா, செட்டிபாளையம் பேரூராட்சி செயலாளா் தினேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

