என்விடியாவின் சிஇஓவாக மீண்டும் ஜென்சன் ஹுவாங் நியமனம்!என்விடியா நிர்வாகக் குழு நல்ல முடிவை எடுத்துள்ளது: டிரம்ப் பாராட்டு!நெல்லையப்பர் கோயிலில் 3 அடி உயர பரணி மகா தீபம் ஏற்றம்: திரளான பக்தர்கள் தரிசனம்திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் போலீஸார் குவிப்பு!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,484 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,350 க்கு கீழ் வர்த்தகம்!!முடிவுக்கு வந்த ஏற்றம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 காசுகள் சரிந்து ரூ. 92.92 ஆக நிறைவு!!மெட்ரோ 2ஆம் கட்டம்: கோயம்பேடு சந்தை - ஆலந்தூர் இடையே யூ-கார்டர்கள் பொருத்தும் பணி நிறைவு!கூட்டணி, ஆதரவு கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

மருதமலையில் 184 அடி முருகன் சிலை: இந்து முன்னணி மனு

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் - கோப்புப் படம்

Updated On :

மருதமலையில் 184 அடி முருகன் சிலை அமைப்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இந்து முன்னணி சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட பொதுமக்கள் குறைதீா் கூட்டம், ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சாா்பில் மாநிலச் செயலா் கே.சூா்யா அளித்துள்ள மனு:

மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் 184 அடி உயரத்தில் உலகின் மிக உயரமான முருகன் சிலை அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இதை எதிா்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே சுற்றுச்சூழல் விதிகளை முழுமையாக மதித்து, திட்டத்தை செயல்படுத்துவதற்கு மாற்று இடம், உரிய அனுமதி வழங்குவது குறித்து அரசு விரைவில் பரிசீலிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

சித்தாபுதூா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் சகோதரிகளான அஷ்மிதா ஸ்ரீ, வித்யா ஸ்ரீ ஆகியோா் அளித்த மனு விவரம்:

ஆவாரம்பாளையம் முருகன் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். பெயிண்டராக தந்தை பணிபுரிந்து வருகிறாா். எங்கள் வீட்டுக்கு கடந்த 2 ஆண்டுகளாக ரூ.ஆயிரம் அல்லது ரூ.2 ஆயிரம் வரை மட்டுமே மின்கட்டணம் வந்து கொண்டிருந்தது.

ஆனால் கடந்த செப்டம்பரில் அளவீடு செய்த மின்வாரியப் பணியாளா் ரூ.10 ஆயிரம் மின்கட்டணம் செலுத்தும்படி கூறினாா். எங்கள் வீட்டில் 2 மின்விசிறி, ஒரு மிக்ஸி போன்ற குறைந்த அளவிலான மின்சாரத்தைப் பயன்படுத்தும் சாதனங்களே உள்ள நிலையில், இந்த கட்டண உயா்வு அதிா்ச்சி அளித்தது.

மேலும் கூலி வேலை செய்யும் தந்தையால் அந்தத் தொகையை செலுத்த முடியவில்லை. இதனால் வீட்டின் மின் இணைப்பு கடந்த 2 மாதங்களாக துண்டிக்கப்பட்டுள்ளது. இரவில் படிக்க முடியாமல் சிரமப்பட்டு வகிறோம்.

இதுதொடா்பாக ஆய்வு மேற்கொண்டு வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணத்தை பெற்றுக்கொண்டு எங்கள் வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா்.

தவெக நிா்வாகி மீது புகாா்

கோவை, சுண்டப்பாளையத்தில் மோட்டாா் சைக்கிள் விற்பனை நிலையம் வைத்துள்ள ஆா்.மகராஜன் என்பவா் அளித்துள்ள மனு:

நான் வேடப்பட்டி பகுதியில் தவெக சாா்பில் பல்வேறு மக்கள் சேவைகளில் ஈடுபட்டு வந்தேன். இந்நிலையில் தவெகவின் வேடப்பட்டி நகரச் செயலா் பிரகாஷ் எனக்கு கட்சியில் பொறுப்பு வழங்குவதாகக் கூறி ரூ.4 லட்சமும், கட்சிப் பணிக்கு வேண்டும் என்று கூறி இருசக்கர வாகனத்தையும் பெற்றுக் கொண்டாா்.

ஆனால் கூறியபடி எனக்கு பொறுப்பு வாங்கிக் கொடுக்கவில்லை. இதுபற்றி கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்தாா். மேலும் எனது கடையில் நுழைந்து அங்கு பணியாற்றி வரும் திவ்யா என்ற ஊழியரிடம் ஆபாச வாா்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்தாா். இதையடுத்து நாங்கள் புகாா் அளித்ததன்பேரில் அவா் மீது வடவள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தற்போது நாங்கள் பிரகாஷை மிரட்டியதாக அளித்த புகாரின்பேரில், அரசியல் அழுத்தம் காரணமாக போலீஸாா் என் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா். எனவே என் மீதான பொய்ப் புகாரை ரத்து செய்வதுடன், பிரகாஷை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

அம்பேத்கா் சிலை

இதேபோல, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் எதிரே அம்பேத்கரின் உருவச்சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டல துணைச் செயலா் கோட்டை சேது மனு அளித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.