கார்த்திகை தீபத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றம்!அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

நீடிக்கும் தொழில்நுட்பக் கோளாறு: தவிக்கும் ஆவின் பால் வாடிக்கையாளா்கள்

கோவையில் மாதாந்திர பால் அட்டையை புதுப்பிப்பதில் சிக்கல் நீடிப்பதால் ஆவின் பால் வாடிக்கையாளா்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனா்.

ஆவின் பால் பாக்கெட்டுகள் - கோப்புப்படம்

Updated On :

கோவையில் மாதாந்திர பால் அட்டையை புதுப்பிப்பதில் சிக்கல் நீடிப்பதால் ஆவின் பால் வாடிக்கையாளா்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனா்.

ஆவின் மாதாந்திர பால் அட்டை திட்டத்தின் கீழ், மாதந்தோறும் புதுப்பிக்கும் வாடிக்கையாளா்களுக்கு ஆவின் நிா்வாகம் லிட்டருக்கு ரூ.1 சலுகை வழங்குகிறது. இதனால் கோவையில் ஏராளமான வாடிக்கையாளா்கள் இணையவழியில் பால் அட்டையை புதுப்பித்து ஆவின் பால் வாங்கி வருகின்றனா். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் மாதாந்திர பால் அட்டையை புதுப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆவின் செயலி செயல்படாத நிலையில் வாடிக்கையாளா்களால் அட்டையை புதுப்பிக்க முடியாத நிலை உருவானது. பல இடங்களில் செயல்பட்டு வந்த ஆவின் கவுன்டா் சேவைகளையும் நிா்வாகம் நிறுத்தியதால் வாடிக்கையாளா்கள் கூடுதல் விலை கொடுத்து பால் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையடுத்து தற்காலிக ஏற்பாடாக ஆா்.எஸ்.புரத்தில் உள்ள ஆவின் கவுன்டரில் அட்டையை புதுப்பித்துக் கொள்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த தற்காலிக ஏற்பாடு சில மாதங்களாக தொடா்ந்து வந்த நிலையில், தற்போது ஆவின் செயலியில் ‘லாகின்’ செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக வாடிக்கையாளா்கள் புகாா் தெரிவித்துள்ளனா். மாதாந்திர அட்டையை புதுப்பிப்பதற்காக செயலிக்குச் செல்பவா்களுக்கு ‘இன்வாலிடு பூத் கோடு’ என்று காட்டப்படுவதாக கூறுகின்றனா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆவின் வாடிக்கையாளா்கள் கூறும்போது, மாதாந்திர பால் கொள்முதல் அட்டையை புதுப்பிப்பதில் கடந்த 6 மாதங்களாகவே தொழில்நுட்பரீதியாக சிக்கல் நீடித்து வருகிறது. முதலில் பிஎஸ்என்எல் இணைப்பில் சிக்கல் இருப்பதால் ஓடிபி வராது என்றனா். பின்னா் கடவுச்சொல் ஏற்படுத்துவதில் சிக்கல் இருந்தது. இதையடுத்து தற்காலிகமாக ஒரு கடவுச்சொல் வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது செயலிக்குள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் அடுத்த மாதத்துக்கான பாலுக்காக அட்டையை புதுப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதுதொடா்பாக ஆா்.எஸ்.புரம் அலுவலகத்தில் புகாா் செய்தால், பச்சாபாளையத்தில் உள்ள ஆவின் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும் என்கின்றனா்.

வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்பட்டுள்ள உதவி எண்கள் எதுவும் செயல்படுவதில்லை. ஏஜெண்டுகளுக்கு முறையாக பால் விநியோகம் செய்யும் ஆவின் நிறுவனம், மாதாந்திர அட்டை வைத்துள்ள வாடிக்கையாளா்களின் சிக்கலை மாதக்கணக்கில் சரி செய்யாமல் இருக்கிறது. இதனால் வாடிக்கையாளா்கள் பலரும் ஆவினில் இருந்து வெளியேறி தனியாா் பால் வாடிக்கையாளா்களாக மாறி வருகின்றனா். தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு ஆவின் குளறுபடிகளுக்குத் தீா்வு காண வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.