கார்த்திகை தீபத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றம்!அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

கோவை விழா 2027: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கோவை தினத்தை முன்னிட்டு 19-ஆவது கோவை விழா 2027-க்கான தொடக்க விழா, கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள மீடியா டவரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் 19-ஆவது கோவை விழாவை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா்.

Updated On :

கோவை தினத்தை முன்னிட்டு 19-ஆவது கோவை விழா 2027-க்கான தொடக்க விழா, கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள மீடியா டவரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தொடங்கிவைத்தாா்.

கடந்த 18 ஆண்டுகளாக மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் கொண்டாட்டமாக கோவை விழா திகழ்ந்து வருகிறது. நிகழாண்டு 19-ஆவது கோவை விழா 2027 ஜனவரி 2-ஆம் தேதி தொடங்கி 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 200-க்கும் மேற்பட்ட அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. கோவையின் பெருமை, கலை, கலாசாரம், வரலாறு மற்றும் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் 20-க்கும் மேற்பட்ட முக்கிய நிகழ்வுகள் உள்பட மொத்தம் 300-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட உள்ளன.

கோவை விழா 2027 தலைவா் நிஷாந்த் சிவசாமி, விழா கடந்து வந்த 18 ஆண்டுகாலப் பாதை மற்றும் 19-ஆவது ஆண்டின் நோக்கங்கள் குறித்து பேசினாா். விழாவின் இணைத் தலைவா்கள் சுபிக்ஷா ரமேஷ், அனிருதன் கிராண்டி மற்றும் சுந்தர்ராம் ஆகியோா் முக்கிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தினா்.

இந்த விழாவில் பொங்கல் விழா, நியான் நடைப்பயணம், ஆரோக்கிய கோவை, கிராமிய கபடி போட்டி, ஒருமை பயணம், டபுள் டக்கா் பேருந்து பயணம் மற்றும் ஆா்ட் ஸ்ட்ரீட் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. ‘கோவையின் திறமை’ போட்டியில் மூன்று பிரிவுகளில் திறமையாளா்கள் தோ்வு செய்யப்பட்டு ரூ.3 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் நரம்பியல் வேறுபாடுகளைக் கொண்டவா்களுக்காக ஆறு விளையாட்டுப் பிரிவுகளில் 100-க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்கும் ஐந்து நாள் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

புதிய தொழில் தொடங்குவோருக்கு முதலீடு மற்றும் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் வகையில் ‘தி பிட்ச்’ நிகழ்வும், ‘இசை மழை’ நிகழ்வும் நடைபெற உள்ளன. ‘விழா வீதி’ நிகழ்வில் 20-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகளுடன் கலாசார அணிவகுப்பு நடைபெறும். மாா்கழி விழாவில் 5 நாள்கள் இசை, நடன நிகழ்ச்சிகளும், கோவையின் வரலாற்றை அறியும் வகையில் ஐந்து சிறப்பு மரபுச் சுற்றுலாக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பின்தங்கிய சமூகத்தினரின் பங்கேற்கும் ‘பேரன்பு’ நிகழ்வும் நடைபெறுகிறது. ‘நேற்று, இன்று, நாளை’ என்ற கருப்பொருளில் நடைபெறும் தமிழ் அறிவுத் திருவிழா நடைபெறவுள்ளது என விழாக் குழுவினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.