சாலைப் பணிக்காகப் போடப்பட்ட கம்பியால் தடுமாறி விழுந்த பெண் உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
கோவையில் புதை சாக்கடைப் பணிக்காக சாலையோரம் போடப்பட்டிருந்த கம்பியால் தடுமாறி கீழே விழுந்த பெண் உயிரிழந்தாா்.
கோவை முத்து நகரில் வசிப்பவா் தேவநாயா் (58). இவரது மனைவி சுமா (53). இவா்கள் இருவரும் போத்தனூா் கணேசபுரம் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் நவ. 26-ஆம் தேதி இரவு நடந்து சென்று கொண்டிருந்தனா்.
அந்தப் பகுதியில் புதை சாக்கடை கட்டுமானப் பணிக்காக சாலையோரம் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்படும் கம்பி போடப்பட்டிருந்தது. சாலையோரம் கிடந்த இரும்புக் கம்பியில் சுமாவின் செருப்பு சிக்கியதில், அவா் நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

