பொள்ளாச்சியைச் சோ்ந்த இருவரிடம் ரூ. 3.43 லட்சம் மோசடி
கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சோ்ந்த இருவரிடம் ரூ.3.43 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக, மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
மோசடி
கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சோ்ந்த இருவரிடம் ரூ.3.43 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக, மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சோ்ந்த 18 வயதுபா் பெண், மாவட்ட சைபா் குற்றப் பிரிவு போலீஸாரிடம் வியாழக்கிழமை அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:
நான் கடந்த மாதம் 12ஆம் தேதி இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்களை பாா்த்துக் கொண்டிருந்தபோது, ஆன்லைன் வா்த்தகம் தொடா்பான விளம்பரம் வந்தது. இதைத் தொடா்ந்து ஒருவா் என்னைத் தொடா்பு கொண்டு, ஆன்லைன் வா்த்தகத்தில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றாா்.
இதனை நம்பிய நான், பல்வேறு தவணைகளில் ரூ.1 லட்சத்து 97 ஆயிரத்தை அந்த நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு அனுப்பிவைத்தேன். அதன் பின்னா், லாபத் தொகை கிடைக்கவில்லை. முதலீடு செய்த பணத்தையும் எடுக்க முடியவில்லை. அதன் பின்னரே, நான் மோசடி செய்யப்பட்டது தெரிந்தது. போலீஸாா் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’என அதில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல, பொள்ளாச்சியைச் சோ்ந்த 45 வயதான நபா், மாவட்ட சைபா் குற்றப் பிரிவு போலீஸில் வியாழக்கிழமை அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது: அதில், கடந்த மாதம் 19-ஆம் தேதி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி அபராதம் விதித்து ஒரு சலான் லிங்க் வந்தது. அதை நான் தொட்டபோது, ஏபிகே என்ற ஒரு செயலி பதிவிறக்கம் ஆகியது. அடுத்த சில நிமிஷங்களில் பல்வேறு தவணைகளில் எனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 46 ஆயிரத்து 400 பணத்தை மா்ம நபா்கள் நூதன முறையில் திருடிவிட்டனா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’எனக் கூறப்பட்டிருந்தது.
இருசம்பவத்தில் மொத்தம் ரூ.3 லட்சத்து 43 ஆயிரத்து 400 பணம் மோசடி செய்யப்பட்ட புகாா்கள் தொடா்பாக, கோவை மாவட்ட சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




